தமிழ்நாடு மின்சாரவாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம்

தங்களை அன்புடன் வரவேற்கிறது

மாற்றம் ......................முன்னேற்றம்


             1990 ம் ஆண்டு துவக்கப்பட்ட தொழிலாளர் ஐக்கிய சங்கம் என்ற அமைப்பு மின்வாரிய தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்று வேரூன்றி மாபெரும் சக்தியாக உருவெடுத்து 25 ஆண்டு காலத்தை கடந்து வெள்ளி விழா கண்ட சங்கமாக மாறி விட்டது. சங்கம் துவங்கிய நேரத்தில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் என்றும் சிறுவர் இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது என்றும் சிறுமைப் படுத்தியவர்கள் எல்லாம் அண்ணாந்து பார்த்திடும் அளவிற்கு  ஐக்கிய சங்கத்தை வளர்ச்சியடையச் செய்து இருக்கிறோம். கடந்த 25 ஆண்டு காலத்தில் சோதனைகள் பல கடந்து சாதனைகள் பல செய்து இருக்கிறோம்.

      தொழிற் சங்கம் துவங்குவதின் அடிப்படை நோக்கமான தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் பல்வேறு பதவி உயர்வுகளை பெற்றுத் தந்து சமூக அந்தஸ்தை உயர்த்துவதிலும் தொழிலாளர் ஐக்கிய சங்கத்திற்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாது. மேலும் ஓரு முன்னேற்றமாக தொழிலாளர் ஐக்கிய சங்கம் என்ற பெயர் தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கமாக மாறி தொடர்ந்து உழைத்து வரும் ஓரு அமைப்பாகும்

            உழைக்கும் தோழர்களே ஓன்று படுவோம்....

                          உரிமைகளை நிலைநாட்டிட போராடுவோம் ...