தொழிலாளர் ஐக்கிய சங்கம் உதயம்

1987 -ம் ஆண்டில் தமிழ்நாடு மின்வாரியதிற்குள் அடி எடுத்து வைக்கும் பொழுதே அல்லல்பட வேண்டிய அவலத்திற்கு மின்வாரிய தொழிற்சங்கங்களால் தள்ளப்பட்ட நிலையில் நம்மை ஆதரித்து ஆதரவுக் கரம் நீட்ட யாரும் முன்வரவில்லை. நாம் பணியேர்ப்பு செய்து மின்வாரியத் தொழிலாளியாக சிறப்பாக பணியாற்றி வந்த போதும் நம்மை அங்கீகரிக்க மறுத்து வந்த தொழிற்சங்க தலைவர்களின் எண்ணங்களைப் போலவே கீழ்மட்டத்தில் பணியாற்றி வந்த மூத்த ஊழியர்களும் நம்மை மாற்றாந்தாய் பிள்ளைகளாய் பாவிக்க ஆரம்பித்து விட்டனர். நாம் பணியேர்ப்பு செய்ததே நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டுதான் என்பதால் இன்னும் சில நாட்களில் இவர்களின் வேலை பறிபோய் விடும் என்றும், நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஏற்கனவே பணியாற்றி வந்த ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்திட உத்தரவு வரப்போவதாகவும் ஆங்காங்கே ஒரு பீதியை கிளப்பிவிட்டனர்.
 
இதனால் அச்சமுற்ற நண்பர்கள் எல்லாம் ஆங்காங்கே விடுமுறை தினங்களில் ஒன்றுகூடி தங்களது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலையோடு கலந்து பேசத் துவங்கினர். மேலும் அலுவலகத்தில் நமது பணிதிறமைகளை பார்த்த அதிகாரிகள் நமக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதை பார்த்து நம்மீது எதிர்ப்புணர்வுகளை வெளிக்காட்ட துவங்கினர்.
 
இப்படிப்பட்ட நெருக்கடிகளும் நிர்பந்தங்களும் ஜீரணிக்க முடியாத உள் உணர்வுகளாலும் உந்தப்பட்டு மாற்றந்தாய் பிள்ளைகளாய் உதாசீனப்படுதப்பட்ட சூழலில் தான் ஆதரவின்றி அல்லல் பட்ட நாம் அடலேறுகளாய் அணி வகுத்து ஒருவரின் கையை ஒருவர் பிடித்து நமக்கு நாமே இழந்து போன நம்பிக்கையை உயிர்த்தெழச் செய்து தன்னம்பிக்கை சுடரை ஒளி வீசிட முயற்சிகள் மேற்கொண்டோம். தாமரை இலையில் பட்ட நீர்க்குமிழியாய் ஒவ்வொரு பகுதியிலும் சிதறிக்கிடந்த அடலேறுகளின் உணர்வுகளை ஆரவாரப்படுத்தி உணர்ச்சிகளை கட்டுபடுத்தி ஐக்கியமாக்கிடும் முயற்சியில் ஈடுபட்டோம்.
 
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நமது நண்பர்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய சட்ட பாதுகாப்புடன் கூடிய தொழிற்சங்க அமைப்பை தொழிற்சங்க பதிவு சட்டத்தின் கீழ் தோற்றுவித்திட முடிவு செய்தோம். அதன்படி TNEB Engineering Trade Certificate Holders Association (TNEB ETCHA) என்ற பெயரில் 131/PDK என்ற எண்ணில் உதவி தொழிலாளர் ஆணைய மண்டல அலுவலகம் திருச்சியில் தமிழக முழுவதற்கும் செயல்படும் விதத்தில் புதிய தொழிற்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தென் பகுதியில் கடலூர், விழுப்புரம் பகுதியில் கிளை அமைப்புகளை உருவாக்கி செயல்பட்டு வந்தது.
 
இதேபோல நமது நண்பர்களின் திருமண நிகழ்ச்சிகள், விபத்து, மரணம் மற்றும் பிரிவு அலுவலக நெருக்கடிகளுக்கு ஆளானவர்களுக்கு உதவிகள் புரிவது என்ற நோக்கங்களோடு கோவையை தலைமையிடமாக கொண்டு தொழிலாளர் நல இயக்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை தோற்றுவித்தனர். அதன் அடிப்படையில் தமிழகத்தின் வட பகுதிகள் முழுவதும் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
 
இதன் பிறகு இரண்டு அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் தமிழத்தில் உள்ள அனைத்து பகுதி நிர்வாகிகளும் ஈடுபட்டு பல்வேறு இடங்களில் இதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டது. ஆனாலும் முடிவுகள் எட்டப்படாமலேயே காலம் கடந்து கொண்டு இருப்பதை எண்ணிய விழுப்புரம் மற்றும் கடலூர் நிர்வாகிகள் கடந்த 10.03.90 அன்று அனைத்து பகுதி நிர்வாகிகளையும் தங்களது பகுதியில் நடைபெறும் தொழிற்சங்க விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததை ஏற்று தமிழகம் முழுவதில் இருந்தும் தொழிற்சங்கம் உருவாக்கிட ஆர்வத்தோடு செயல்பட்டவர்கள் எல்லாம் விழுப்புரத்தில் ஒன்று கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டோம்.
 
தொழிலாளர்கள் நல இயக்கத்தின் சார்பில் திரு.ஞா.பால்கென்னடி (உடுமலை) அவர்களும் TNEB ETCHA-வின் சார்பில் திரு.மு.சுப்பிரமணியன் (புதுகை) அவர்களும் இணைந்து இணைப்பு முடிவினை அறிவிக்காமல் வெளியேறக்கூடாது என்கிற நெருக்கடி ஏற்பட்ட பின்னர் ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு அவதரிக்கப்பட்ட குழந்தையாக ஒரு புதிய பெயரில் தொழிற்சங்க அமைப்பை தோற்றுவிப்பது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. அனைவரின் கருத்து ஒப்புதலோடு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட சங்கம்தான் "தமிழ்நாடு மின்சாரவாரிய தொழிலாளர் ஐக்கிய சங்கம்".
 
இச்சங்கம் உருவாக்கப்படும் பொழுதே கட்சி சாராது செயல்பட வேண்டும் என்ற கொள்கையை அடிப்படியாகக் கொண்டு தோற்று விக்கப் பட்டது. இந்த நோக்கத்தின்அடிப்படையிலேதான் ஜாதி, மத , இன,மொழி ,கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வந்த மத்திய தொழிற்சங்க அமைப்பான HMS என்கின்ற பேரியக்கத்துடன் நாம் 1999 -ல் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டோம் .1987 -ம் ஆண்டில் தமிழ்நாடு மின்வாரியதிற்குள் அடி எடுத்து வைக்கும் பொழுதே அல்லல்பட வேண்டிய அவலத்திற்கு மின்வாரிய தொழிற்சங்கங்களால் தள்ளப்பட்ட நிலையில் நம்மை ஆதரித்து ஆதரவுக் கரம் நீட்ட யாரும் முன்வரவில்லை. நாம் பணியேர்ப்பு செய்து மின்வாரியத் தொழிலாளியாக சிறப்பாக பணியாற்றி வந்த போதும் நம்மை அங்கீகரிக்க மறுத்து வந்த தொழிற்சங்க தலைவர்களின் எண்ணங்களைப் போலவே கீழ்மட்டத்தில் பணியாற்றி வந்த மூத்த ஊழியர்களும் நம்மை மாற்றாந்தாய் பிள்ளைகளாய் பாவிக்க ஆரம்பித்து விட்டனர். நாம் பணியேர்ப்பு செய்ததே நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டுதான் என்பதால் இன்னும் சில நாட்களில் இவர்களின் வேலை பறிபோய் விடும் என்றும், நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஏற்கனவே பணியாற்றி வந்த ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்திட உத்தரவு வரப்போவதாகவும் ஆங்காங்கே ஒரு பீதியை கிளப்பிவிட்டனர்.
 
இதனால் அச்சமுற்ற நண்பர்கள் எல்லாம் ஆங்காங்கே விடுமுறை தினங்களில் ஒன்றுகூடி தங்களது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கவலையோடு கலந்து பேசத் துவங்கினர். மேலும் அலுவலகத்தில் நமது பணிதிறமைகளை பார்த்த அதிகாரிகள் நமக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதை பார்த்து நம்மீது எதிர்ப்புணர்வுகளை வெளிக்காட்ட துவங்கினர்.
 
இப்படிப்பட்ட நெருக்கடிகளும் நிர்பந்தங்களும் ஜீரணிக்க முடியாத உள் உணர்வுகளாலும் உந்தப்பட்டு மாற்றந்தாய் பிள்ளைகளாய் உதாசீனப்படுதப்பட்ட சூழலில் தான் ஆதரவின்றி அல்லல் பட்ட நாம் அடலேறுகளாய் அணி வகுத்து ஒருவரின் கையை ஒருவர் பிடித்து நமக்கு நாமே இழந்து போன நம்பிக்கையை உயிர்த்தெழச் செய்து தன்னம்பிக்கை சுடரை ஒளி வீசிட முயற்சிகள் மேற்கொண்டோம். தாமரை இலையில் பட்ட நீர்க்குமிழியாய் ஒவ்வொரு பகுதியிலும் சிதறிக்கிடந்த அடலேறுகளின் உணர்வுகளை ஆரவாரப்படுத்தி உணர்ச்சிகளை கட்டுபடுத்தி ஐக்கியமாக்கிடும் முயற்சியில் ஈடுபட்டோம்.
 
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நமது நண்பர்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய சட்ட பாதுகாப்புடன் கூடிய தொழிற்சங்க அமைப்பை தொழிற்சங்க பதிவு சட்டத்தின் கீழ் தோற்றுவித்திட முடிவு செய்தோம். அதன்படி TNEB Engineering Trade Certificate Holders Association (TNEB ETCHA) என்ற பெயரில் 131/PDK என்ற எண்ணில் உதவி தொழிலாளர் ஆணைய மண்டல அலுவலகம் திருச்சியில் தமிழக முழுவதற்கும் செயல்படும் விதத்தில் புதிய தொழிற்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தென் பகுதியில் கடலூர், விழுப்புரம் பகுதியில் கிளை அமைப்புகளை உருவாக்கி செயல்பட்டு வந்தது.
 
இதேபோல நமது நண்பர்களின் திருமண நிகழ்ச்சிகள், விபத்து, மரணம் மற்றும் பிரிவு அலுவலக நெருக்கடிகளுக்கு ஆளானவர்களுக்கு உதவிகள் புரிவது என்ற நோக்கங்களோடு கோவையை தலைமையிடமாக கொண்டு தொழிலாளர் நல இயக்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை தோற்றுவித்தனர். அதன் அடிப்படையில் தமிழகத்தின் வட பகுதிகள் முழுவதும் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
 
இதன் பிறகு இரண்டு அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் தமிழத்தில் உள்ள அனைத்து பகுதி நிர்வாகிகளும் ஈடுபட்டு பல்வேறு இடங்களில் இதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டது. ஆனாலும் முடிவுகள் எட்டப்படாமலேயே காலம் கடந்து கொண்டு இருப்பதை எண்ணிய விழுப்புரம் மற்றும் கடலூர் நிர்வாகிகள் கடந்த 10.03.90 அன்று அனைத்து பகுதி நிர்வாகிகளையும் தங்களது பகுதியில் நடைபெறும் தொழிற்சங்க விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததை ஏற்று தமிழகம் முழுவதில் இருந்தும் தொழிற்சங்கம் உருவாக்கிட ஆர்வத்தோடு செயல்பட்டவர்கள் எல்லாம் விழுப்புரத்தில் ஒன்று கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டோம்.
 
தொழிலாளர்கள் நல இயக்கத்தின் சார்பில் திரு.ஞா.பால்கென்னடி (உடுமலை) அவர்களும் TNEB ETCHA-வின் சார்பில் திரு.மு.சுப்பிரமணியன் (புதுகை) அவர்களும் இணைந்து இணைப்பு முடிவினை அறிவிக்காமல் வெளியேறக்கூடாது என்கிற நெருக்கடி ஏற்பட்ட பின்னர் ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு அவதரிக்கப்பட்ட குழந்தையாக ஒரு புதிய பெயரில் தொழிற்சங்க அமைப்பை தோற்றுவிப்பது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. அனைவரின் கருத்து ஒப்புதலோடு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட சங்கம்தான் "தமிழ்நாடு மின்சாரவாரிய தொழிலாளர் ஐக்கிய சங்கம்".
 
இச்சங்கம் உருவாக்கப்படும் பொழுதே கட்சி சாராது செயல்பட வேண்டும் என்ற கொள்கையை அடிப்படியாகக் கொண்டு தோற்று விக்கப் பட்டது. இந்த நோக்கத்தின்அடிப்படையிலேதான் ஜாதி, மத , இன,மொழி ,கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வந்த மத்திய தொழிற்சங்க அமைப்பான HMS என்கின்ற பேரியக்கத்துடன் நாம் 1999 -ல் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டோம் .